திங்கள், 12 செப்டம்பர், 2011

ராஜா மகள் ராணியின் கனவுகள்

என்னை எல்லோருக்கும் பிடிக்கும்
உன்னையும் எல்லோருக்கும் பிடிக்கும்
நம்மை ஏன் நமக்கு பிடிக்க வில்லை

என் மெளனத்தையே உன்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை என்றால்
என் வார்த்தைகளை உன்னால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்

நினைபதற்கு பல நினைவுகள் இருந்தபோதும்
உன் நினைவை விட இனிமையான நினைவுகள்
எதுவுமில்லை

தேவையான பல விடையங்களை மறந்து போகிறேன்
நான்
உன் நினைவுகளைத்தவிர

என் ஞாபகங்களை கழற்றி எரிந்து விட்டு
வாழ்க்கைப்பாதையில் நீ நடக்க முடியாது
கவனித்துக்கொள் அன்பே அவை உன்னுடைய
காற் செருப்புகள் அல்ல கால்கள்

உன் நினைவுப்பரிசு எதற்கு???
உன் நினைவே பரிசு எனக்கு

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்

உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன

கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

உன்னை நான் நேசித்தேன் , உன்பிரிவில் தவித்தேன் , துடித்தேன் ,
உன் அருகில் வர நினைக்கும் போதெல்லாம் , தடுக்கிறது கூறிய வாளினால் என் இருதயத்தை கிழித்த அந்த உன் வார்த்தைகள் நான் என்ன செய்வேன் நீயே சொல்..புதிதாய் பிறக்கும் உன் எண்ணங்கள் எல்லாம் புதிய நட்பையே தேடுகின்றது நாடுகின்றது
பழைய நட்பு உனக்கு ஒரு உடையைப்போல் ஆகிவிட்டது, நீ அலற்றி மாற்ற நட்பு என்ன உடையா அல்லது செருப்பா , புனிதமான என் நட்பை எப்போ புரிந்து கொள்வாய் என் நட்பே ..
வந்து போவது நட்பல்ல என்றும் நினைத்து நிலையாய் இருப்பதே நட்பு, இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து இருப்பதே நட்பு, கூடு விட்டு கூடு பாயும் வித்தையல்ல நடப்பு, உயிர் உள்ளவரை உன் நினைவுகளையும்,,உன் அன்பையும், உயிராய் இதையத்தில் சுமப்பதே நட்பு ,,நான் நீ என்று அறியாமலா என்னை விஷ வாய்வு மருதடித்து கொள்ள நினைத்தாய்,,,நான் உன் வார்த்தையைச் சொன்னேன்,, அடிதாங்க முடியும், அது திடீர் என்று தோன்றுவது , வார்த்தை அப்பிடியல்ல மனதில் இருந்து வருவது, எவ்வளவு நாட்களாய் சேர்த்து வைத்த
குப்பையை கொட்டுவதுதான் வார்த்தை,,கொட்டின குப்பையை அள்ளிடலாம் ஆனால் வார்த்தையை நீ அள்ளிட முடியுமா ,, சொன்ன வார்த்தையை மறந்திடுமா மனசு ,,மன்னிப்பு,,,,, மன்னிப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என் நட்பே...
மறந்து விடு அதுதானே,, இந்த வார்த்தையை நான் கேக்கணுமா
நீ என்னை வெறுத்தாலும் மறந்தாலும் நான் உன்னை வெறுக்கவோ மறக்கவோ இல்லையே அப்போ என்னிடம் எதற்கு மன்னிப்பு,,..மறக்க வேண்டாம் நினைத்திருப்போம் நிலைத்திருப்போம் நம் நட்புடன்

பிறந்தவுடன் சொன்னதும்..

உயிரை

வலியோடு முடிக்கும் போது சொல்வதும்,
அம்மா....

.
'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...!'

உன்
அன்பின் கதகதப்பும்,
வலிக்காத தண்டனைகளும்..,

இனி
யாராலும் தர முடியாது..அம்மா..!

கட்டெறும்பு கடித்த போதும் .,
காதல் போன போதும்..,
"அம்மா"
என்று சொல்லி
ஆறுதல் அடைந்தேன்..??

நீ
இங்கே இல்லாமல் போனதாய்
ஊர் சொல்கிறது..

ஆனால் இன்னமும்
என் காலைநேர
கனவில் வந்து அழகாக்குகிறாய்
என் நாட்களை...

அம்மா..
அழகாக்குகிறாய் என் நாட்களை...

எங்கள் பிரிவு கூட என் காதலை வளர்க்குதடா ,
உன் நினைவு அதிகரிக்கையில்,
வாவன் அன்பாய் சண்டைபோட, மோதலில் தான் காதலாமே,இது தெரிந்தா நீ என்னிடம் நித்தமும் சண்டை பிடித்தாய், இல்லை பிரிவதற்கு என்ரேயா,பிரிந்து விடு என்று சொல்லிவிடாதே அது என்னால் தாங்க முடியாது
இல்லையேல் இறந்து விடு என்றும் சொல்லி விடாதே
நான் இறந்து விட்டால் உன்னை தாங்குவதார், ஏன் எனில்
நீ இருப்பது என் இதையம் அல்லவா..

என் அன்பே
இரவு பகலுக்காக காத்திருக்கிறது
துன்பம் இன்பத்திற்காக காத்திருக்கிறது
உழைப்பு வெற்றிக்காக காத்திருக்கிறது
நானும் உனக்காக காத்திருக்கிறேன்
உன்னை சந்திக்கின்ற ஒவ்வொரு மணித்துளியும்
எனக்கு மறவாது கண்ணா
உன் மௌனம் எனக்கு சம்மதமா?
இல்லை உன் மனதில் மௌனப் போராட்டமா?

பிரிந்து போ என்று சொல்லாதே
பிரிவு என்ற சொல்லுக்கு என்னால்
ஈடு கொடுக்க முடியவில்லை...
உன் நிழல்கூட
உன் உருவத்தில் வாழ்கிறதே...
ஏன் என் கனவுகள்
உன்னருகில் இருப்பதை மறுக்கிறாய்??

குட்டிக் கனா

இப்போது
அங்கு உறக்கத்தில் - நீ
இங்கு உன்
நினைவுகளில் - நான்